ஜெர்மனியில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து - 2 பேர் பலி

0 1430

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் இளைஞர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஹம்பர்க் - கீல் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயில், ப்ரோக்ஸ்டெட் நிலையத்தை நெருங்கியபோது, அங்கிருந்த பயணிகளைக் குறிவைத்து மர்மநபர் கத்தியால் சரமாரிக் குத்தினான்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments