பாலிவுட்ல வேணா அவர் பாட்சாவா இருக்கலாம்.. ! சென்னையில இவங்கதான்..!

0 4496

நடிகர் ஷாருக்கானின் பதான் படம்  வெளியாகி சென்னை திரையரங்குகளில் இந்தி ரசிகர்களின்  வரவேற்ப்பை பெற்றாலும், அஜீத் மற்றும் விஜய் படங்களின் காட்சிகளை விட சொற்ப காட்சிகளே திரையிடப்பட்டுள்ளது

பாலிவுட் பாட்சா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானின் பதான் படம் சென்னையில் வெளியானது.

வடபழனி போரம் விஜயா மாலில் உள்ள திரையரங்கில் பதான் படம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நடுவில் நிறுத்தப்பட்டதால் பொறுமை இழந்த ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

செய்தி தொடர்பாளர் ரியாஸ் நேரடியாக தலையிட்டு சமாதானப்படுத்தும் நிலை ஏற்பட்டது

பதான் திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் 50 காட்சிகள் வரை சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

அவர் வேணா பாலிவுட்டுக்கு பாட்சாவாக இருக்கலாம் சென்னை பாக்ஸ் ஆபீஸ் பொருத்தவரை வெளியாகி 15 தினங்கள் கடந்தும் விஜய்யின் வாரிசு 200 காட்சிகளும் , அஜீத்தின் துணிவு 170 காட்சிகளும் திரையிடப் பட்டுள்ளது.

இந்த இரு படங்களுமே 80 க்கும் மேற்பட்ட அரங்கு நிறைந்த் காட்சிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்று பிரபல தயாரிப்பு நிர்வாகி தெரிவித்தார்.

சென்னை தவிர்த்து கோவை, திருச்சி, மதுரை , நெல்லை உள்ளிட்ட பிற நகர்களிலும் பதான் திரைப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்றும், தற்போதும் வாரிசுக்கும், துணிவுக்கும் தான் ரசிகர்கள் வரிசை கட்டி நிற்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments