லித்துவேனியாவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்படும் டிரான்ஸ்பார்மர்

0 1118

லித்துவேனியாவில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலிருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர், கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது.

உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குவதால், லட்சக்கணக்கானோர் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கிவருகின்றனர்.

உக்ரைன் உள்ளிட்ட சோவியத் நாடுகளில் ஒரே மாதிரியான மின் கட்டமைப்பு உள்ளதால், லித்துவேனியாவில், 1980 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிலில்லாமலிருந்த 200 டன் டிரான்ஸ்பார்மர், பார்ட் பார்டாக பிரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது.

18 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் ஒரு மிகப்பெரிய நகருக்கே மின் விநியோகம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments