பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம்

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் மதிப்பு மிக்க உறவை நாடுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் இந்திய அமெரிக்க உறவுகள் வலுவானநிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற சூழலில் அமெரிக்காவும் பிபிசியின் ஆவணப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments