ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்..!

0 1823

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மார்ச் 13ஆம் தேதியன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதற்கான இறுதிப்பரிந்துரை பட்டியலில், ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற 'நாட்டு நாட்டு' பாடல் உள்பட 5 பாடல்கள் சிறந்த பாடல்கள் பிரிவில் இடம்பெற்றன.

அதேபோல், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான பரிந்துரை பட்டியலில், தெப்பக்காடு யானை பராமரிப்பு தம்பதியின் கதையான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' இடம்பெற்றது.

இயக்குனர் ஷானக் செனின் 'ஆல் தட் பிரீத்ஸ்'- சிறந்த ஆவணப்பட விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments