மகள் காதலனுடன் ஓட்டம் தாய் தூக்கில் தொங்க.. தந்தை விஷம் குடித்தார்..! குடும்பமே நிர்மூலமான சோகம்..

0 5477

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதியில் மகள் கலப்பு திருமணம் செய்த மன வேதனையில் தாய் தூக்கிட்டும், தந்தை விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது

தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை - சங்கரம்மாள் தம்பதியினரின் மகள் பேச்சியம்மாள் , இவர் காளிமுத்து என்ற வேறு சாதி இளைஞரை காதலித்து கலப்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாய் சங்கரம்மாளும், தந்தை சின்னதுரையும் கடும் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.தங்கள் செல்ல மகள், விருப்பத்துக்க மாறாக வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்ட துக்கம் தாளாமல் தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் பேச்சியம்மச்ளின் தந்தை சின்னதுரை சாயர்புரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக முறப்பநாடு மற்றும் சாயர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேரடியாக விசாரணை மேற்கொண்டார் அந்த கிராமத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

மகளின் காதல் திருமணத்தால், தந்தை மற்றும் தாய் இருவரும் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதால், அவர்களது கிராமமே சோகத்தில் மூழ்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments