காதலிப்பதாக பிளஸ் 1 மாணவியை ஏமாற்றி நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது..!

0 3083

மதுரையில் பிளஸ்1 மாணவியை காதலிப்பதாகக் கூறி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மதுரையை சேர்ந்த கார்த்திக் என்பவர் பள்ளியில் படித்து வந்த 16 வயது மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கீரைத்துறையில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றிருந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற கார்த்திக், அங்கு தனது நண்பர்களை வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கார்த்திக் அவனது நண்பர்கள் ஆதித்யா, ஹரிதாஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments