ஒடிசாவில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்காத விவகாரம்.. மாவட்ட ஆட்சியர் உள்பட 3 அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்திவைக்க உத்தரவு..!

ஒடிசாவில் 51 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்பட 3 அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்குல் மாவட்டத்தில் 1961ம் ஆண்டில் குகூர்பேட்டா நீர்ப்பாசனத் திட்டத்திற்காக188 பேருக்குச் சொந்தமான 62 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வரை அங்குல் மாவட்ட ஆட்சியர், நிலம் கையகப்படுத்தும் அலுவலர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரின் ஊதியத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.
Comments