அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் - ராகுல் காந்தி

அன்பான, புத்திசாலியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில், திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ராகுல், சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் குறைந்தபட்சம் இரண்டு குணாதிசயங்களுடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பெண் தனது தாயார் சோனியா மற்றும் பாட்டி இந்திராவின் குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும் என ராகுல் முந்தைய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments