ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் - இபிஎஸ்

ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜியின் மகன் சச்சின்ராமுக்கும், கூடலூர் முன்னாள் அதிமுக நகர் மன்ற தலைவர் அருண்குமாரின் மகள் பிரதிஷ்டா தேவிக்கும், கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அவர் மாலை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.இந்நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு தேனி பைபாஸ் சாலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
Comments