இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற மாணவர் ஜெனரேட்டர் இயந்திரத்தில் மோதி உயிரிழப்பு

சென்னையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜெனரேட்டர் இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவர் உயிரிழந்தார்.
சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மதுரவாயல் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். நேற்று இரவு வடபழனியில் இருந்து சூளைமேடு நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கோடம்பாக்கம் பாலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தனியார் வங்கி வளாகத்தில் இருக்கும் ஜெனரேட்டர் இயந்திரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.
Comments