தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாடலுக்கு நடனமாடிய ரஷ்ய நாட்டு நடனக் கலைஞர்கள்..!

இந்திய - ரஷ்ய கலாச்சாரத்தை இணைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ரஷ்ய நடனக் குழுவினர் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ய கலாச்சார நடனம் ஆடினர்.
மாநகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தூய்மை மாநகரை உருவாக்குவோம் என்ற செல்ஃபி பாயிண்ட்டில் போட்டோ எடுத்துக் கொண்ட ரஷ்ய கலைஞர்கள், நிகழ்ச்சியில் முடிவில் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடினர்.
ரஷ்ய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற மேயர் சண்.ராமநாதனும், ஆணையர் சரவணக்குமாரும், ரஷ்ய நடனப் பெண்களுடன் போட்டோ எடுப்பதில் போட்டிப் போட்டு கொண்டு ஆர்வம் காட்டினர்.
Comments