காக்கா முட்டை பட பாணியில் செல்போன் பறிப்பு.. வட மாநில இளைஞர் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு..!

0 1826

சென்னை கொருக்குபேட்டையில் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து செல்போன் பார்த்தபடி பயணித்த வடமாநில இளைஞரிடமிருந்து, ரயிலின் கீழே இருந்த அடையாளம் தெரியாத நபர் செல்போனை பறிக்க முயன்ற போது, இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். 

வெஸ்ட் பெங்காலை சேர்ந்த ரோனி சேக் என்ற இளைஞர் கடந்த 20-ஆம் தேதி கோரமண்டல் விரைவு ரயிலில் கேராளாவிற்கு கொத்தனார் வேலைக்காக சென்று கொண்டிருந்தார்.

கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே, ரயிலின் கீழே இருந்த நபர், ரோனி சேக்கிடமிருந்து செல்போனை பறிக்க முயன்ற போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு,  மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ரோனி சேக் உடன் வந்த அவரின் உறவினர் அஷ்ரப் ஷேக் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments