தாசில்தார் என்று பொய் கூறி வயதான பெண்களிடம் தங்க நகைகளை மோசடி செய்த இளம்பெண் கைது..!

0 1509

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாசில்தார் எனக்கூறி வயதான பெண்களிடம் மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூரைச் சேர்ந்த சீபா புஷ்பாராணி என்பவர்  புள்ளரம்பாக்கம், பென்னாலூர்பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தான் ஒரு தாசில்தார் என்றும், முதியோர் உதவி தொகை வாங்கித் தருவதாகவும் மூதாட்டிகளிலும் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு சிசிடிவி உதவியால் சீபா புஷ்பா ராணியைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments