நோயாளியிடம் ரூ.100 வீடியோவில் சிக்கிய பெண் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! திருடிக்கு ஷாக் அடித்த சம்பவம்..!

0 2370

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளிடம் நுழைவு சீட்டு பெற 100 ரூபாய் லஞ்சம் வாங்குவதை வழக்கமாக செய்து வந்த பெண் ஊழியரை கையும் களவுமாக சிக்கியதால் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் மட்டுமின்றி, கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், முக்கூடல் , கடையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் நுழைவு சீட்டுக்கு 100 ரூபாய் லஞ்சம் வசூலிப்பதாக குற்றசாட்டு எழுந்தது.

சம்பவத்தன்று 100 ரூபாய் இல்லை என்ற காரணத்துக்காக தாயை அழைத்துச்சென்ற சிறுவனுக்கு நுழைவு சீட்டு வழங்க மறுத்து ஊழியர் மேரிராஜன் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற சமூக ஆர்வலர்கள் நுழைவு சீட்டு வழங்குவதற்கு மேரிராஜன் 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதை செல்போனில் படம் பிடித்தனர்.

இதையடுத்து அவர் பணத்தை கையில் இருந்து மேஜையில் வைத்து விட்டு வாங்காதது போல நடித்தார்

இந்த பணத்தை யார் உங்களிடம் வாங்க சொன்னார் என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர், அந்த பெண் ஊழியர் இனிமேல் நான் காசு வாங்கமாட்டேன், மன்னித்து விடுங்கள் என்றறு கையெடுத்து கும்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளும் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக அதே குற்றசாட்டினர்

அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் அடாவடியாக லஞ்சம் பெறும் ஊழியர்களை கண்டித்து விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் மருத்துவமனை நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த மருத்துவமனையில் நுழைவு சீட்டுக்கு மட்டுமல்லாமல் இங்கு பிரசவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வருகை தரும் நோயாளிகளிடம் 100 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக நோயாளிகள் வேதனைப்படுவதாக குற்றஞ்சாட்டினர்

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments