மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கிளியர் ஆர்டி மற்றும் சின்க்ரனி டேமோதெரபி சாதனம் அறிமுகம்..!

0 2100

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன் முறையாக, புற்று நோய்க்கட்டியின் தன்மையை கண்டறிந்து, அதனை முழுமையாக அகற்றுவதற்கான கிளியர் ஆர்டி மற்றும் சின்க்ரனி டோமோதெரபி (Clear RT and Synchrony) சாதனம் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

டோமோதெரபி சாதனத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்த பிறகு, மருத்துவமனையின் தலைவர் குருசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு சிறப்பான மாற்றத்தை விளைவிக்கும் வகையில் கதிரியக்க சிகிச்சையில் இந்த நவீன சாதனத்தை அறிமுகம் செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை துல்லியமாக கண்டறிந்து அதனை முழுமையாக நீக்கும் இந்த சிகிச்சை, இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments