பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இடைத்தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையை சந்தித்து பேசினர்.
பின்னர், பேட்டியளித்த ஜெயக்குமார், பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறப்பட்ட பிறகு, கமலாலயம் வந்த ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என ஓ.பி.எஸ். கூறினார்.
Comments