ஜம்முவில் உள்ள நர்வாலில் அடுத்தடுத்து நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் படுகாயம்..!

0 1389

ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் இன்று அடுத்தடுத்து நடைபெற்ற சக்திவாய்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பொதுமக்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் காலை 11 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 30 நிமிட இடைவேளையில் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ராவணுவத்தினரும், தடயவியல் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments