அறநிலையத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்..!

இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments