பாலியல் தொந்தரவு அளித்ததை கண்டித்ததால் மகளிர் ஆணையத் தலைவியை காரில் இழுத்துச் சென்ற போதை ஆசாமி..!

0 1320

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவாலை, போதை ஆசாமி ஒருவன், காரில் இழுத்து சென்ற சம்பவத்தின் காணொலி வெளியாகி உள்ளது.

புதன்கிழமை நள்ளிரவு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே சுவாதி மலிவால் ஆய்வு மேற்கொண்டுவந்தார்.

அப்போது காரில் வந்த போதை ஆசாமி ஒருவன் காரில் ஏறும்படி கூறி சுவாதிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளான்.

அவனது சட்டையை பிடித்து சுவாதி கண்டித்தபோது, கார் கண்ணாடியை ஏற்றிய போதை ஆசாமி, 40 அடி தூரத்திற்கு சுவாதியை இழுத்தபடியே காரில் சென்றான்.

ஹரீஷ் சந்திரா என்ற அந்த 47 வயது நபரை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அவனது காரையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments