ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டிய 7 வீரர்களை தட்டித்தூக்கி சும்மா பறக்கவிட்ட காளை..! விதியை மீறியதால் பாதியில் நிறுத்தம்

0 1348

அடுத்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா ? நடக்காதா? என்று சிலர் பட்டிமன்றம் நடத்தி வரும் நிலையில் விதிகளை பின் பற்றாத காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்களால் கொசவபட்டி ஜல்லிக் கட்டுப் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது

4 பேர் இல்ல 40 பேர் வந்தாலும் சும்மா பறக்க விடுவோம் என்று மல்லுக் கட்டும் வீரர்களுக்கு வார்னிங் கொடுக்கும் இந்த காளை களமாடியது திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி ஜல்லிக்கட்டு..!

எந்த ஒரு விதியும் இல்லை பின் பற்ற ஆளும் இல்லை என்பது போல மாட்டின் உரிமையாளர் மாடு பிடி வீரர்களை களத்திற்குள் புகுந்து மாட்டை பிடிக்க விடாமல் தாக்கினார்

7 வீரர்களை தட்டி தூக்கி பறக்கவிட்டதால் , காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் எச்சரிக்கையை மீறி வாண்டடாக சென்று காளையை பிடிக்க முயன்றதால் கம்பால் அடிவாங்கி மண்ணை கவ்வினர்

இன்னொரு மாட்டின் உரிமையாளரோ மாடு பிடி வீரர் அவரது மாட்டை பிடித்து விட்டார் என்பதற்காக அவரை பின்னால் சென்று தாக்கினார். மற்றொரு வீரர் வந்து அவரை அடித்து விரட்டினார்

நேரம் செல்ல செல்ல மாடு பிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதால் 4 மணி வரை நடக்க இருந்த ஜல்லிக் கட்டை, பிற்பகல் 2 மணிக்கே நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்

நீண்ட வரிசையில் காத்திருந்து வெளியே செல்ல மறுத்த காளைகளின் உரிமையாளர்களை போலீசார் வெளியேற்றினர்

கலைந்து செல்ல மறுத்து கட்டடங்களிலும், மரங்களிலும் அமர்ந்திருந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

விதிமுறைகளை பின்பற்றாத கட்டுப்பாடில்லா எந்த ஒரு போட்டியும் ரகளையில் முடியும் என்பதால் முன் கூட்டியே உஷாராகி ஜல்லிக்கட்டு போட்டியை முடித்து வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments