உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ம் இடம்.. முதல் 10 இடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் 6 பேர் உள்ளனர்..!

0 2041

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்றவர்களை முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சத்யா நாதெல்லா 3-ம் இடத்திலும், சாந்தனு நாராயணன் 4-ம் இடத்திலும், சுந்தர் பிச்சை 5-ம் இடத்திலும் உள்ளனர்.

முதல் 10 இடங்களில் 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments