ஒடும் பேருந்தில் மோதிய சைக்கிள், பேருந்து சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர்தப்பிய முதியவர்..!

0 1188

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே சைக்கிளில் சென்ற நபர், ஓடும் பேருந்தில் மோதி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர்தப்பிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 50 வயதான திலகர் என்பவர் தனது சைக்கிளில், திருவாரூர் அரசு போக்குவரத்துக் கழக பனிமனைக்கு அருகே சென்ற போது, அவசரகதியில் பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையில் திரும்ப முயன்றார்.

அப்போது எதிரே வந்த தனியார் பேருந்தின் பக்கவாட்டில் மோதி, திலகர் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

அதிர்ஷடவசமாக அவர் பேருந்தின் சக்கரத்திற்கு சற்று தள்ளி விழுந்ததால், சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பினார்.

கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments