'லவ் டுடே' பாணியில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் போனை கொடுத்த இளைஞர் போக்சோவில் சிக்கி சின்னாபின்னம்..!

0 44169

தனக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணிடம் லவ் டுடே சினிமா பாணியில் செல்போனை மாற்றி கொடுத்த மணமகன், போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வேலூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்த அரவிந்த்.

ஆம்புலன்ஸ் டிரைவரான இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது .

இந்த நிலையில் அரவிந்டிதன் செல்போனை லவ் டுடே பட பாணியில் நிச்சயக்கப்பட்ட பெண் வாங்கி பார்த்துள்ளார் .

அரவிந்தன் செல்போனை அலசி ஆராய்ந்த போது சில வீடியோக்களை கண்டு அதிர்ந்தார். சிறுமி ஒருவரின் அரை நிர்வாண வீடியோ இருந்துள்ளது.

அதிர்ந்து போன, அந்த பெண் சத்தமில்லாமல் விஷயத்தை அறிந்தும் அறியாதது போல நடந்து கொண்டார்.

பின்னர் இது குறித்து, போலீசுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தகவல் தெரிவிக்க அரவிந்தன் சிக்கிக் கொண்டார்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, இப்படி வீடியோ எடுத்ததும், அதை அழிக்காமல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் வாங்கப்பட்டது.

தொடர்ந்து, அரவிந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதே போன்று வேறு யாருடனாவது அரவிந்த் பழகியுள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

நம்பி செல்போனை கொடுத்தேனே. இப்படி ஜெயிலுக்கு போக வச்சுட்டியே என்று புதுமாப்பிள்ளை புலம்பியபடி சிறைக்கு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments