செல்போனில் மாணவியின் வீடியோ: இளைஞர் போக்சோவில் கைது..!

0 4633

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நிச்சயிக்கப்பட்ட இளைஞரின்  செல்போனில் 10-ஆம் வகுப்பு மாணவியின் அரை நிர்வாண வீடியோ இருந்ததை நிச்சயமான பெண் கண்டுபிடித்ததை அடுத்து, இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

பேளூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது. நிச்சயிக்கப்பட்ட  பெண் அரவிந்திடம் செல்போனை மாற்றிக் கொண்டுள்ளார்.

அவர் அரவிந்தின் செல்போனை ஆராய்ந்த போது, அதில் மாணவியின் அரை நிர்வாண வீடியோ இருந்தது குறித்து, அப்பெண் அரவிந்தின் நண்பர்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவியை அரவிந்த் குறிவைத்து பழகி, அவரின் செல்போன் எண்ணைப் பெற்று, காதல் வலையில் வீழ்த்தியது தெரிய வந்துள்ளது. பின் சிறுமியை அரை நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு கூறி, அதை இவர் வீடியோ பதிவு  செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அப்பெண் போலீசாருக்கு தகவல் அளித்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை அழைத்து புகார் பெற்ற வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார், புது மாப்பிள்ளை கனவில் மிதந்து கொண்டிருந்த அரவிந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments