விபத்தில் சிக்கியவரின் வயிற்றை துளைத்துச் சென்ற அடிபம்பின் கைப்பிடி, கட்டிங் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்ட காட்சி..!

ஆந்திராவில் விபத்தில் சிக்கியவரின் வயிற்றை துளைத்துச் சென்ற அடிபம்பின் கைப்பிடி, கட்டிங் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.
பிரகாசம் மாவட்டத்தில் நாகராஜ் என்பவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த அடி பம்பு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், அடிபம்பின் கைப்பிடி நாகராஜின் வயிற்றை துளைத்துக்கொண்டு உள்ளே சென்றது.
வலியால் துடித்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துமவனைக்கு அனுப்பிவைத்தனர்.
கட்டிங் மெஷின் மூலம் பம்பு கைப்பிடி வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் சிக்கிக்கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள் மற்றும் உலர்ந்த பெயிண்ட் ஆகியவற்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.
Comments