கிராமங்களில் வசிக்கும் மக்கள் குறைகளை போக்கும் விதமாக கிராமங்களுக்கே நீதிபதிகள் தேடி வந்து நீதி வழங்க ஏற்பாடு - மத்திய அமைச்சர்

கிராமங்களில் வசிக்கும் மக்கள் குறைகளை போக்கும் விதமாக கிராமங்களுக்கே நீதிபதிகள் தேடி வந்து நீதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஏழை மக்கள், சாதாரண மக்கள், விவசாய மக்கள் அதிகம் உள்ள கிராமத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை ஆய்வு செய்யவே தாம் தமிழகம் வந்து இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தாய் மொழியான தமிழ் மொழியில் வாதாடும் படி நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார் .
Comments