உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 'BharOS' இயங்குதளம் அறிமுகம்... இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில் உருவாக்கிய மெட்ராஸ் ஐஐடி

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தனிஉரிமை பாதுகாப்பு வசதியுடன் கூடிய 'BharOS' இயங்குதளத்தை தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதன் இயக்குனர் காமகோடி, ஆன்ட்ராய்டு போன்ற இயங்குதளங்களில் தனிஉரிமை தகவல்கள் திருடப்படுவதாகவும், அதற்கு மாற்றாக பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கென பிரத்யேகமாக புதிய 'BharOS' இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக கூகுள் பிக்சல் மொபைல் போனில் இந்த இயங்குதளம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும், மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தங்கள் ஏற்படும் பட்சத்தில், நாடு முழுவதும் 'BharOS' இயங்குதளம் கொண்ட மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் காமகோடி தெரிவித்தார்.
Comments