மகரவிளக்கு, மண்டல பூஜைகள் அனைத்தும் நிறைவு... சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை அடைப்பு

0 1303

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்தஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்றுடன் நெய்யபிஷேக, களபாபிஷேக வழிபாடுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை நடை அடைக்கப்பட்டு, மாசி மாத பூஜைக்காக அடுத்த மாதம் 12ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments