காதலியை சந்திக்க பர்தாவில் சென்ற பையன் போலீசிடம் சிக்கினார்..!

0 2640

காதலியை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுவதற்காக, பெண் போல பர்தாவுடன் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரை கல்லூரி காவலாளிகள் மடக்கிப்பிடித்தனர்... சினிமா ஐடியாவால் சிக்கிய 2k கிட்ஸ்...

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஸ்ரீ மூகாம்பிகா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரியின் நுழைவாயில் மற்றும் கல்லூரி வளாகத்தில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சம்பவத்தன்று காவலாளிகள் ரோந்து பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றி வருவதை பார்த்து அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்ததால் பர்தாவை விலக்கி பார்த்தபோது, உள்ளே இருந்தது ஒரு பையன் என்பது தெரியவந்தது.

அந்த பர்தா இளைஞரை குலசேகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர், கேரள மாநிலத்தை சார்ந்தவர் என்றும், கோழிக்கோடு பகுதியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருவதாகவும், இந்த கல்லூரியில் படிக்கும் தன் காதலியிடம் தினமும் போனில் பேசி வந்ததாகவும், அவரை நேரில் பார்க்கவும் மனம் விட்டு பேசும் திட்டத்துடன் கேரளாவில் இருந்து வரும் போதே கடைக்கு சென்று பர்தா வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து வாலிபரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்தனர். அவர்கள் உடனடியாக குலசேகரம் காவல் நிலையம் வந்து, தங்கள் மகனின் செயலுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து அவனை அழைத்து சென்றனர்.

காதலியை சந்திக்க கல்லூரி மாணவர் பர்தா அணிந்து பெண் போல் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments