சவுதி அரேபியாவில் மெஸ்ஸி - ரொனால்டோ பங்கேற்ற காட்சிக் கால்பந்து போட்டியைக் காண 21 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை செலுத்தி டிக்கெட் பெற்ற சவூதி தொழிலதிபர்

0 9544

கால்பந்து நட்சத்திரங்களான ரொனால்டோ- மெஸ்ஸி பங்கேற்ற ஆட்டத்தை காண சவுதி தொழில் அதிபர் ஒருவர் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்களை செலுத்தி டிக்கட்டை பெற்றுச்சென்றார்.

உலக கோப்பை போட்டியில் கோப்பை வென்ற அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்அணியும் , அண்மையில் சவுதி அல்நாசர் கிளப்பில் இணைந்துள்ள ரொனால்டோவின் அணியும் மோதிய காட்சி  போட்டி , ரியாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டிக்கட்டை  ரியல் எஸ்டேட் குழுமமான AqarOne இன் பொது மேலாளரான Mushref Al-Ghamdi,என்பவர் 21 கோடி ரூபாய்க்கு ஏலத்தில்  எடுத்து போட்டியை காண சென்றார் . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments