இந்தியா பெரிய கனவுகளைக் காண்பது சாத்தியமாகியுள்ளது - பிரதமர் மோடி

பெரும் கனவை சாத்தியமாக்கும் வல்லமை சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதன்முறையாக சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் இரண்டு மெட்ரோ வழித்தடங்களைத் தொடங்கி வைத்து 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கான சுகாதாரம் உள்கட்டமைப்பு மற்றும் ஊரகப் பயணம் தொடர்பான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய மோடி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்வதை உலகம் அறிந்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். இந்தியாவின் ஆற்றல் கண்ணாடி போல் துல்லியமாகக் காட்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.மும்பை அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மாற்றங்களை சந்திக்க இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
Comments