அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு..!

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானி, தனது அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகளை 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து 250 கோடி அமெரிக்க டாலர்களை திரட்ட முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக பங்குச் சந்தை அமைப்பிடம் அளித்துள்ள அறிக்கையில், ஒரு பங்கின் விலையை 3 ஆயிரத்து 276 ரூபாய் வரையில் நிர்ணயம் செய்துள்ளதாகவும், பெரிய முதலீட்டாளர்கள் 50 சதவீதத்தை முன்பணமாகவும், மீதமுள்ள தொகையை இரண்டு தவணைகளில் செலுத்தி பங்குகளை வாங்கலாம் எனவும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 64 ரூபாய் வரையில் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments