நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல் நலக்குறைவால் காலமானார்

0 2569

மதுரை, விரகனூரில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்கிற பாப்பா உடல் நலக்குறைவால் காலமானார்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயார் உயிரிழந்ததாக நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

தனது தாய் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், பா.ம.க. எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் கட்சித்  தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தனர் என்றும் வடிவேலு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments