மதுபோதையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்.. பதற்றம் அதிகரிப்பால் போலீசார் குவிப்பு

0 1983

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மதுபோதையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு, வன்முறையாக மாறியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம், அங்கு மதுபோதையிலிருந்த ஜீவா வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த விக்ரம் மற்றும் ரமேஷ், தங்களது ஆதரவாளர்களுடன் சென்று மூங்கில்துறைப்பட்டில் இருந்த குடிநீர் குழாய், பாத்திரங்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது.

தகவலின்பேரில் விரைந்த மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர்,  அசம்பாவிதம் ஏதும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments