பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. இரவு நேரத்தில் அணிவகுத்த வாகனங்களால், திக்கு முக்காடிய சுங்கச்சாவடி!

0 1406

பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பிய வண்ணம் உள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையொட்டி சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் சென்னை திரும்பத்தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை முதல் வெறிச்சோடி காணப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி, இரவு நேரத்தில் அணிவகுத்த தொடர் வாகனங்களால் திக்கு முக்காடியது. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments