ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்..!

0 2659

ஆப்கானிஸ்தானில், திருட்டில் ஈடுபட்டதாக கூறி 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு 39 கசையடிகள் வழங்கப்பட்டன. 

இதற்கிடையே, முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் கட்டவிழ்த்து விடுவதாக இங்கிலாந்து முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான ஷபானா நசிமி சுட்டிக் காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments