ரொனால்டோ குடும்பத்தினருக்காக 2 மணி நேரம் மூடப்பட்ட 'தீம் பார்க்'..!

0 18520

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, குடும்பத்தினருடன் பொழுதுபோக்குவதற்காக சவுதி அரேபியாவிலுள்ள தீம் பார்க்கிற்குள் 2 மணி நேரம் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அல் நஸ்ர் கிளப்பிற்கு இரண்டரை ஆண்டுகள் விளையாட 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமான ரொனால்டோ, தனது பெண் தோழி ஜார்ஜினா, அவர்களது 4 குழந்தைகளுடன் சவுதிக்கு இடம்பெயர்ந்தார்.

அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பொழுதுபோக்குவதற்காக ரியாத்திலுள்ள போலுவா வோர்ல்டு கேளிக்கை பூங்கா 2 மணி நேரம் மூடப்பட்டது.

சவுதி அரேபியாவில் திருமணமாகாத ஆண், பெண் சேர்ந்து வாழ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரொனால்டோவிற்கு மட்டும் பிரத்யேகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments