சோன முத்தா போச்சா....? பறந்த ட்ரோன் காமிராவை லாவகமாக லபக்கிய முதலை

0 1687

முதலை ஒன்று ட்ரோன் காமிராவை லாவகமாக கவ்விப்பிடித்த வீடியோவை பகிர்ந்துள்ள தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, இயற்கை உலகம் எப்போதும் தொழில் நுட்பத்தை வெற்றிக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்

சில மாதங்களுக்கு முன்பு ஏரியின் மீது பறந்தபடி முதலையை படம் பிடித்த ட்ரோன் காமிராவுக்கு ஸ்கெட்ச் போட்ட முதலை ஒன்று அந்த ட்ரோனை பின் தொடர்ந்து சென்று எம்மிக்குதித்து ர்டோனை கவ்வ முயற்சித்தது. பாவம் ட்ரோனை இயக்கியவர் சற்று மேலே உயர்த்தியதால் அது தப்பியது

இந்த நிலையில் அதே பாணியில் ஏரியில் நீந்திய இளம் முதலை ஒன்றை பறந்தபடியே படம் பிடித்த ட்ரோனை , ஆவலோடு பின் தொடர்ந்தது அந்த முதலை. சாமர்த்தியமாக நீந்திச்சென்ற அந்த முதலை நீரை விட்டு மேலே எம்பிய வேகத்தில் ட்ரோன் காமிராவை ஒரே பிடியில் கவ்விக் கொண்டு தண்ணீருக்குள் சென்று விட்டது

உள்ளதும் போச்சா ... என்று அந்த ட்ரோன் காமிரா ஆப்பரேட்டர் மிரண்டு போன நிலையில் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா, இயற்கை உலகம் எப்போதும் தொழில் நுட்பத்தை வெற்றிக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்

அவரது கருத்தை பலரும் வரவேற்று இருந்தாலும், ஏற்கனவே இந்த இயற்கை உலகம் தொழில் நுட்பத்திடம் தோற்றுப்போயுள்ளது என்று பழைய முதலை வீடியோவை அவருக்கு பதிலாக டுவிட் செய்துள்ளனர்

மொத்தத்தில் ஏரியில் முதலைகளை படம் பிடிக்க போகும் ட்ரோன் காமிரா ஒளிப்பதிவாளர்கள் கவனமாக இல்லாவிட்டால், முதலையால்... முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த சம்பவங்கள் சொல்லும் சேதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments