13 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார்.. 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

சென்னையில், நள்ளிரவில் 13 வயது சிறுவன் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
காசி தியேட்டர் அருகே வசிக்கும் மாணிக்கம் - சுதா தம்பதியினரின் 13 வயது சிறுவன் விளையாடிவி1 மணி நேரத்தில் சிறுவன் மீட்புட்டு மிகவும் தாமதமாக வீட்டுக்கு திரும்பியதற்காக தந்தை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் குமரன் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்த நிலையில், சூளைமேடு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்றிருந்த சிறுவனை மீட்டு விசாரணை செய்தனர்.
முதலில் விசாரணை செய்ததில், தன் பெயரை தெரிவித்து, பெற்றோர்கள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு வந்ததாகவும் அப்போது அவர்களிடம் இருந்து தவறி பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளான்.
இந்நிலையில் சூளைமேடு போலீசாருக்கு,இதே அடையாளங்கள் உடன் 13 சிறுவன் காணாமல் போனது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கிடைத்தவுடன் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கட்டுப்பாட்டு அறை மூலம் சிறுவன் பற்றி தகவல் அறிந்த போலீசார், பெற்றோருக்கும், சிறுவனுக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். குழந்தைகள் காணாமல் போனால் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கும் காவல் கட்டுப்பாட்டை அறைக்கும் தொடர்பு கொண்டால் உடனடியாக மீட்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments