நியூசிலாந்திலிருந்து 145 பயணிகளுடன் ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில், நடுவானில் எந்திரக் கோளாறு..!

0 2538

நியூசிலாந்திலிருந்து 145 பயணிகளுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்ற விமானத்தில் நடுவானில் எந்திரக்கோளாறு ஏற்பட்டது.

காண்டாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயங் விமானம், டாஸ்மன் கடல் மீது பறந்தபோது அதிலிருந்த எஞ்சின்களுள் ஒன்று பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

விமானத்திலிருந்து கட்டுப்பாடு அறைக்கு உச்சபட்ச SOS எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், சிட்னி விமான நிலைய ஓடுபாதை அருகே 12 தீயணைப்பு வாகனங்களும், ஏராளமான ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

எவ்வித அசம்பாவிதமும் நேராமல், விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments