உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. 16 பேர் பலி..!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
உள்துறை அமைச்சர் டென்னிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயரதிகாரிகளுடன் பயணித்த அரசு ஹெலிகாப்டர் ப்ரொவாரி நகரிலுள்ள மழலையர் பள்ளி அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.
உள்துறை அமைச்சர் மொனாஸ்டிர்ஸ்கி, துணை அமைச்சர் யெனின், உள்துறை செயலாளர் லுப்கோவிச், 2 பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 15 பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
Comments