பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலருக்கு நேர்ந்த துயரம்..!

0 1517

கடலூர் அருகே பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு மற்றும் எஸ்.கே பாளையம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இரவு பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பியபோது எதிர்பாராத விதமாக ரோந்து வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது.

இதில், வாகன இடுக்கில் சிக்கிய காவலர் சதீஷ்குமார் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார். உயிரிழந்த காவலர் சதீஷ்குமாரின் உடலை பார்த்து உறவினர்கள், காவலர்கள் கண்ணீர் மல்க கதறி அழுதனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments