முதல் உலகப்போரில் அமெரிக்கா இழந்ததைவிட அதிக வீரர்களை இழந்த ரஷ்யா..!

0 2169

முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்ததை விட உக்ரைனுடனான போரில் ரஷ்யா அதிக வீரர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு வருடமாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், உக்ரைன் போரில் இதுவரை 6ஆயிரத்திற்கும் குறைவான வீரர்களே இறந்திருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments