மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்.. எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்..!

0 1183

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ், அதிமுகவின் கட்சிக்கொடியை ஏற்றி, இனிப்புகளை வழங்கினார்.

எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் 106 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

அதிமுக டெல்லி அலுவலக செயலாளர் மற்றும் மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த, அதிமுக தொண்டரின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவியினை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments