நெல்லையில் மர்ம நபர்கள் வீசியெறிந்து பெரும் சப்தத்துடன் வெடித்த மர்ம பொருள்.. போலீசார் தீவிர விசாரணை!

0 5292

நெல்லை டவுன் குற்றால ரோடு பகுதியில் மர்ம நபர்கள் வீசியெறிந்து பெரும் சப்தத்துடன் வெடித்த மர்ம பொருள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அங்குள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்ற ஐயப்பன் மற்றும் அவரது உறவினர் கலை ஆகிய இருவரையும் காரில் வந்த மர்மகும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் விரட்டியுள்ளனர்.

அப்போது, மர்மநபர்கள் வீசியெறிந்த பொருள் தரையில் பட்டு வெடித்தாக கூறப்படுகிறது. இருவரும் தப்பியோடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர காவல்துறை ஆணையாளர் தலைமையிலான போலீசார், தடயவியல் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments