நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு..!

0 1868

நேபாளத்தின் போக்ரா விமான நிலையத்தின் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் இருந்து 72 பேருடன் சென்ற Yeti ஏர்லைன்ஸ் விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் போக்ரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது, Seti நதிக்கரையில் உள்ள வனப்பகுதியில் மோதி தீப்பற்றியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் பலியாகினர்.

இந்நிலையில், தேடுதலுக்கு பின் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதாகவும், அது சேதமடையாமல் நல்ல நிலையில் இருப்பதாகவும் காத்மாண்டு விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். ஆய்வுக்கு பின் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments