விடுதியில் தங்கியுள்ள 3 பெண்கள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயம்..!

0 1644

தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது. 

கும்கும்குமாரி, ஊர்மிளா,  பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி,  தாம்பரத்தில்  உள்ள தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் தங்கியுள்ள விடுதியின்  மொட்டை மாடியில் தாழ்வான நிலையில்  செல்லும் உயர் அழுத்த HT மின் வயர் அருகே நின்று, கும்கும்குமாரி  இன்று காலை செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த மின் வயரில் இருந்து, செல்போன் மூலம் மின்சாரம் பாய்ந்து கும்கும்குமாரி தூக்கி வீசப்பட்டதாகவும், அவரை காப்பாற்ற சென்ற பூனம், ஊர்மிளா ஆகியோரையும் மின்சாரம் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கும்கும் குமாரிக்கு பயங்கர தீக்கயங்களும், தூக்கி வீசப்பட்டதில் பின் மண்டையிலும் காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஊர்மிளா 40 சதவீதம் தீக்காயங்களுடனும், பூனம் 30சதவீதம் தீக்காயங்களுடனும் தாம்பரம் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments