ஹரியானாவில் போலீஸ் கார் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு விவகாரத்தில் தப்பியோடிய போலீசார் 3 பேர் 'சஸ்பெண்ட்'

0 1606

ஹரியானா மாநிலத்தில், போலீஸ் கார் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குருகிராம் - பரிதாபாத் சாலையில் லாரி ஒன்று விபத்தில் சிக்கியதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு போக்குவரத்தை சீர் செய்ய, சாலையின் ராங் சைடில் சென்ற போலீஸ் இன்னோவா கார், எதிரே வந்த ஸ்விப்ட் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஸ்விப்ட் காரில் இருந்த 6 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நிகழ்ந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்ற போலீஸ் காரிலிருந்த ஓட்டுநர் உள்பட 3 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments