தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. அதிமுகவிற்கு வழி பிறந்துவிட்டது - இபிஎஸ்

0 2129

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கு உணவுகளை வழங்கி வழிபட்டார்.


தொடர்ந்து விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயியாக, விவசாயிகளுடன் சேர்ந்து மாட்டுப்பொங்கலை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. அது போல அதிமுகவிற்கும் வழி பிறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

திமுக அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அருகிலேயே தோல் தொழிற்சாலை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகப்வும், நிலத்தடி நீர் பாதிக்கும் என்பதால் அங்கு தோல் தொழிற்சாலையை கொண்டு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments